நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....
அது என்னமோ தெரியலைங்க எனக்கும் ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல. நான் ஒரு சாதுவான பிராணிங்க. யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன். (ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவுதான் அவங்க தொளஞ்சாங்க :-).) இது ஆட்டோகாரங்களுக்கு ரொம்ப நல்லதா போச்சு. எப்பயுமே ஆட்டோல ஏறுரப்ப ஒரு ரேட் சொல்லுவாங்க அப்புறம் இறங்கும் பொழுது ஒரு ரேட் கேப்பாங்க. இந்த அட்டோகராங்க கூட மல்லுக்கட்டுன ரெண்டு மூணு சம்பவத்த சொல்லுறேன் கேளுங்க. கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன். எனக்கு மும்பை போறதுல ஒரு சந்தோசம் ஏனா அங்க ஆட்டோல எல்லாம் மீட்டர் தான் பயன்படுதுவாங்கனு கேள்விபட்டேன். சரி பஸ்ஸ்டாண்டு போனவுடனே என் நண்பன் கிட்ட போன்போட்டு எப்படிடா வருனும்னேன். அவன் ஒரு அட்ரஸ் சொல்லி அத ஆட்டோல சொல்லு அவங்க கொண்டு வந்து விட்டுவாங்க சொல்லிடு டேய் அங்க இருந்து இங்க வர 30 ரூபாய் ஆகும்னு ஏன் கிட்ட சொன்னான். சரின்னு ஒரு ஆட்டோ காரன்கிட்ட இங்க போகணும் அப்படின்னு இங்கிலீஷ் தான் சொன்னேன் அவனுக்கு என்னத்த புருஞ்சதோ மண்டைய ஆடிட்டு ஓகே அப்படினான். அவன் நான் சொன்ன எடத்துல என்னை இறக்கி விட்டுட்டு 80 ரூபாய் கேட்டான் அப்ப நெனச்சேன் இதுக்கு நம்ம சென்னையே எவ்வளவோ தேவலைன்னு. நான் எவரம் புரியாம அண்ணா மீட்டர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு அவன்கிட்ட சொல்ல அவன் ஒரு ஸ்லிப் எடுத்து இங்க பாருங்க இதுல என்னா ரேட் போட்டுருக்குனு என்னா பார்க்க சொன்னான். ஆமாங்க அதுல 80 ரூபாய் தான் போட்டிருந்தது. அதுக்குள்ளா என்னோட உயிர் நண்பன் வந்துடான். இப்போ பாருடா அப்படின்னு நெனச்சுகிட்டு என் நண்பன பார்த்து சிரிச்சேன். இதுல என்னா கொடுமைனா அவனுக்கும் ஹிந்தி தெரியாது :-). நாங்க கடைசியா போராடி என்னா காரணம்னு கேட்ட இது பெட்ரோல் ஆட்டோவாம். மும்பைல பெட்ரோல் ஆட்டோ, காஸ் ஆட்டோன்னு ரெண்டு இருக்குறது அப்போதான் என் நண்பனுக்கே தெரிஞ்சது. சரின்னு அவன்கிட்ட காச குடுத்துட்டு வந்தேனுங்க வேற வழிஇல்லமா.
அப்போதான் அவன் சிரிச்ச சிரிப்புக்கு அர்த்தம் புருஞ்சது.
டிஸ்கி: மும்பைல யாரும் பெட்ரோல் ஆட்டோ எற மாட்டங்களாம்.
சம்பவம் 2:
இப்போ என்னா பண்றோம் மும்பைல இறந்து அடுத்த சீன் நம்ம சென்னைக்கு மாத்துறோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்ப நங்க நல்லூர்ல இருந்த எங்க அக்கா வீட்டுக்கு போலாம்னு ஏர்போர்ட்ல ஆட்டோ கேட்டா அவன் 200 ரூபாய் கேட்டான். ஏர்போர்ட்ல இருந்து எங்க அக்கா வீட்டுக்கு ஒரு 1.5km தான் இருக்கும்.ஆனாலும் நான் சரின்னு சொல்லிட்டேன். அவன் என்னடணா அங்க வந்ததுக்கு அப்புறம் சார் 300 ரூபாய் குடுங்க அப்படினான். அட பாவி ஏண்டானு கேட்டா அவன் சொன்னான் சார் நீங்க விமானத்துல வந்துருக்குறீங்க அதுனால கொடுங்க அப்படினான். அட பாவி டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவருடனு சொல்லி அவன் கிட்ட மல்லுகட்டி கடைசியா 250 ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ளே என்ன ஏர்போர்ட்ல இருந்து கூப்பிட போன எங்க அக்கா அவங்க கார்ல திரும்பி வீட்டுக்கே வந்துடாங்க.
டிஸ்கி: என்னடா இவன் அக்கா கார்ல கூப்பிட வந்துருக்காங்க இவன் ஏன்டா ஆட்டோல வந்தனு யாராவது கேப்பிங்க. அது ஒரு பெரிய கதை அத ஒரு தனி பதிவா போடுறேன்.
இது மாதிரி ஏக பட்டது இருக்குங்க. என் நண்பர்கள்கிட்ட நான் ஆடோல வந்தேன்னு சொன்னா அவங்க மொத கேட்க்கிற கேள்வி இன்னைக்கு எவ்ளோடா அலுதனு கேப்பாங்க.
யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)
11 comments:
//யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன்.//
நண்பா உன்னை பற்றி தெரிஞ்ச ஒரு அரிசந்திரன் இங்கன இருக்கான் என்பதை மறந்து எப்படிய்யா இப்படி எழுத மனசு வந்துச்சு.
நீ ஆபிசில் “அக்கம் பக்கம் ” பேசினதே இல்லை!!!:)))
//ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல.//
ஆட்டோ காரர்களுக்கு மட்டும் இல்லை:))
எனக்கும் தான்:))
//கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.//
உனக்காக வருத்தபட்டு வருத்தபட்டு நாற்பதுபேர் வரை ஆஸ்பிட்டலில் சேர்ந்து இருக்கிறார்கள்...
பல பேர் லாட்ஜில் ரூம்போட்டு அழுதுக்கிட்டு இருக்கிறார்கள்.
//ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன்.//
ஊரான் என்பதை எப்படி ரீஜெண்டா சொல்றான் பாருங்க மக்களே!!!
//யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)//
கல்யாணம் ஆகாதவர்கள் ஐடியா கொடுத்தால் என்ன ஆகும்?
//யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு//
ஐடியா நம்பர் 1
ஆட்டோவை நீ சொந்தமாக வாங்கிடு
ஐடியா நம்பர் 2
நீ இதுவரை எழுதிய கவிதைய ஒன்னு ஒன்னா அவனிடம் சொல்லிட்டு வா
அழுதுக்கிட்டே காசு வாங்காம ஓடி போய்விடுவான்
ஐடியா நம்பர் 3
பேசாம நீ திரும்ப அமெரிக்காவே போய்விடு.
ஆட்டோ அனுபவங்கள் எப்பவுமே மறக்க முடியாதுதானுங்க..
நானும் உங்கள மாதிரிதான்.. நமெக்கெல்லாம் நெத்தில எழுதி ஒட்டியிருக்கும்னு நெனெக்கிறேன்.
'தல நாள்ல ஆம்பிள பிள்ளையா பிறக்கும்' -னு வேற சொல்லீட்டிங்க..
அதனாலே நாங்க என்ன பண்ணினோம்ன்னு சொல்லரேன்..
இந்தத் தடவ சென்னை போனப்ப.. T Nagar- ல இருந்து வேளச்சேரி போறதுக்கு.... அங்க நின்னுட்டிருந்த ஒரு ட்ராபிக் போலீஸ் மாமாட்ட போய் கேட்டு அவர ஆட்டோ புடிச்சு கொடுக்கச்சொன்னோம். அவரும் அட்டகாசமா உதவி செஞ்சார்..
நீங்களும் அடுத்த முறை முயற்சி செஞ்சு பாருங்க..
ஊழல் செய்வது பற்றி கனவிலும் நினைக்காத, லஞ்சம் என்பது என்னவென்றே அறியாத ஒரு தற்கால அமைச்சரின் பெயரை சொல்பவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து தப்பிக்க வழிமுறைகள் தனி மடலில் அனுப்பப்படும்.
// ஆட்டோ அனுபவங்கள் எப்பவுமே மறக்க முடியாதுதானுங்க..
நானும் உங்கள மாதிரிதான்.. நமெக்கெல்லாம் நெத்தில எழுதி ஒட்டியிருக்கும்னு நெனெக்கிறேன்.
'தல நாள்ல ஆம்பிள பிள்ளையா பிறக்கும்' -னு வேற சொல்லீட்டிங்க..
அதனாலே நாங்க என்ன பண்ணினோம்ன்னு சொல்லரேன்..
இந்தத் தடவ சென்னை போனப்ப.. T Nagar- ல இருந்து வேளச்சேரி போறதுக்கு.... அங்க நின்னுட்டிருந்த ஒரு ட்ராபிக் போலீஸ் மாமாட்ட போய் கேட்டு அவர ஆட்டோ புடிச்சு கொடுக்கச்சொன்னோம். அவரும் அட்டகாசமா உதவி செஞ்சார்..
நீங்களும் அடுத்த முறை முயற்சி செஞ்சு பாருங்க.. //
நல்ல ஐடியா குடுத்தீங்க போங்கோ நம்ம ஊரு போலீஸ்காரங்க எப்ப எப்படி இருப்பான்கனே தெரியாது. சரி இதையும் ட்ரை பண்ணி பார்க்க வேண்டியதுதான்
நன்றி சூர்யா
// ஊழல் செய்வது பற்றி கனவிலும் நினைக்காத, லஞ்சம் என்பது என்னவென்றே அறியாத ஒரு தற்கால அமைச்சரின் பெயரை சொல்பவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து தப்பிக்க வழிமுறைகள் தனி மடலில் அனுப்பப்படும்.//
அது யாருங்க அப்படி ஒரு அமைச்சர். நீங்கலே சொல்லிடுங்க தல.
//நீ ஆபிசில் “அக்கம் பக்கம் ” பேசினதே இல்லை!!!:))) //
முதல பேச மாட்டேன்(இது உங்களுக்கு தெரியும்) ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் நிறுத்த மாட்டேன்
// ஆட்டோ காரர்களுக்கு மட்டும் இல்லை:))
எனக்கும் தான்:)) //
:-))))
//உனக்காக வருத்தபட்டு வருத்தபட்டு நாற்பதுபேர் வரை ஆஸ்பிட்டலில் சேர்ந்து இருக்கிறார்கள்...
பல பேர் லாட்ஜில் ரூம்போட்டு அழுதுக்கிட்டு இருக்கிறார்கள்.
//
வருத்தப்பட்டு என்ன பண்ணுறது யாருமே தீ குளிகிளியே நண்பா :-)
//கல்யாணம் ஆகாதவர்கள் ஐடியா கொடுத்தால் என்ன ஆகும்? //
என்ன ஆகும் நண்பா ?
இரண்டாவது ஐடியா வென முயற்சி பண்ணுறேன் நண்பா
Post a Comment