Monday, October 13, 2008

ஏன் என் நண்பன் திட்டுனானு தெரியலைங்க நீங்கலாவது சொல்லுங்க

என்னோட நண்பன் ஒருத்தன் வர சனிக்கிழமை சென்னை பேரனாம். அவன் வந்து எங்க மேனேசுருகிட்ட "I'm flying to chennai on coming saturday." அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அவன் வந்ததுக்கு அப்புறம் அவன் கிட்ட கேட்டேன் ஏன்டா flight ல போறதுனால flying னு சொன்ன அது bus ல போனின "i'm buying to chennai on coming staturday" னு சொல்லுவியா இல்ல train ல போனா "I'm training to chennai on coming staturday" னு சொல்லுவியானு கேட்டேனுங்க அதுக்கு அவனுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி என்னை திட்டிடாங்க. நீங்களே சொல்லுங்க நான் கேட்டதுள்ள எதாவது தப்பு இருக்கானு :-(

இரவு கவி

Wednesday, October 1, 2008

பெண்

பெண்





பெண்ணே காரணம்
அன்புக்கும்
ஆத்திரத்திற்கும்....

பெண்ணே காரணம்
மரியாதைக்கும்
அவமரியாதைக்கும்....

பெண்ணே காரணம்
சாதனைக்கும்
சோதனைக்கும்....

பெண்ணே காரணம்
காதலுக்கும்
அதன் தோல்விக்கும்....

பெண்ணே காரணம்
கருவறைக்கும்
கல்லறைக்கும்....


இரவு கவி

Tuesday, September 23, 2008

"Myyy.. Myyyy name is" To "I'm " ..

ஆபீஸ்ல கொஞ்ச நேரம் வேலையில்லாம இருந்தேன். சரி என்னடா பண்ணலாம்னு யோசிச்சா டங்குன்னு ஒரு 100watts பல்பு என்னோட மண்டைல எரிந்தது.
அது வேறு ஒன்னும் இல்லைங்க கதை எழுதுறதுதான்.

அட நம்ம கதைய யாருடா படிப்பாங்க அப்படின்னு நெனச்சு முடிகறதுக்குள்ள மனசாச்சி சொல்லுச்சு நல்லவங்க, வல்லவங்க, அறிவாளிங்க , புத்திசாலிங்க எல்லாம் தமிழ்மணத்துல இருக்குறாங்க அவங்கள போய் மறந்துடியேடா.

நீ நல்லாவே எழுதுனைனாலும் இவன் ஏதோ try பண்ணுறான் இவன் ரொம்ப நல்லவண்டானு சொல்லுவாங்கனு சொல்லுச்சு. சரின்னு கடவுள் மேல பாரத்த sorry தமிழ் மணத்து மேல பாரத்த போட்டு ஆரம்பிச்சிட்டேன்

கதை ஆரம்பம் ஆகிவிட்டது.........


தன் கல்லூரி வாழ்கை முடிந்து முதன் முதலாக அலுவலகத்திற்கு தயங்கிக்கொண்டே செல்கிறான். அவன் தயக்கத்திற்கு காரணம் அவனுடைய குறைந்த ஆங்கில அறிவு.
இன்று முதுகலை பட்டப்படிப்பே முடித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் பலரின் நிலைமை இதுதான்.

அவன் தயக்கத்திற்கு இன்னொரு காரணம் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. அதற்க்கு வேறு காரணம் இருந்தாலும் அவனது மனதில் நின்றது அவனுடைய நண்பர்கள் கூறியது மட்டும் தான் டேய் மச்சி பொண்ணுங்க எல்லாம் பயங்கரமா ஆங்கிலத்தில் பேசுவாங்கட நீயும் பேசணும் இல்லாடி யாரும் உன்னை
மதிக்காம படு கேவலமாக பார்பாங்க டா.அதை கேட்டதிலிருந்து அவனுக்கு எந்த பெண்ணை
பார்த்தாலும் அது தான் முதலில் நியாபகத்துக்கு வரும்.

அவன் அலுவலக வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பொழுது அவனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள் . அவளை பார்த்தவுடனே தெரிந்து விடும் அவள் ஒரு பீட்டர் அக்கா
என்று.அதுவும் அழகாக வேறு இருந்தால்.அவனுடைய மனதில் சிறு குழப்பம் எங்கே இவள் நம்மிடம் பேசிவிடுவாளோ என்று அவன் நினைத்து முடிக்கும் முன் Hi, I'm Rosi. Wats ur name ? என்றால் அதை கேட்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது.
யாராவது திடிரென்று ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு பதில் சொல்ல வராது. பலமுறை மனதில் சொல்லிவிட்டு தான் அவன் பேசுவான். வெகு நேரம் கழித்து Myyyy..Myy nameeee is Ashok என்றான். அடுத்த கேள்வி மின்னல் வேகத்தில் அவளிடம் இருந்து
அவன் தலையில் விழுந்தது I'm new joinee. what about you ? என்றாள்.
இதற்கும் சில நேரம் கழித்து yeahh என்றான். அவள் அவனது பதிலை கவனிக்கும் முன் ஏதோ
போன் கால் வர Excuse me என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். அவனுக்கு அப்பாட என்று இருந்தது. அதற்குள் உள்ளிருந்து வந்த ஒருவர் இவனை கூப்பிட்டு Hi, I'm Rajesh, Project Manager. We are allocating you in this project என்று சொல்லிவிட்டு டீம்ல இருக்குற எல்லாத்தையும் introduce பண்ணிவைத்தார். அந்த டீம்ல எல்லாருமே பசங்கதான் இருந்தாங்க. அதை பார்த்த அவனுக்கு மிக பெரிய சந்தோசம். அவன் சந்தோசம் நிலைக்கும் முன் அதே மேனேஜர் அதே பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
Miss.Rosi, This is your new team என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது நம்ம herovukku கரண்ட் சாக் வச்ச மாதிரி அதாங்க சிவாஜி படத்துல கடைசி scene ல
ரஜினி தனுக்குத்தானே சாக் வச்சுக்குவாறே அது மாதிரி இருந்தது. அதுவும் அவள் ஒவோருவரிடமுமும் கை குலுக்கல் முறையில் introduce ஆகிக்கொண்டு
இருந்தால். அவள் இவனை நெருங்க நெருங்க அவனுடைய கை, கால்கள் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தன. Ashok கை குலுக்கினான? இல்லையா ?.

தொடரும்...


இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள தொடர் கதை எழுதுறானே
என்பது என் காதில விழுகுது.Sorry எழுதிகிட்டு இருக்கும் போது எங்க PM கூப்பிட்டு
வேலை குடுத்துட்டாரு. அதுனால இப்படி ஒரு trick use பண்ணிகிட்டேன் . :-)
சொல்லவே வேண்டியதில்லை எப்படியும் திட்ட போறீங்க அத அப்படியே பின்னூடமா போடீங்கன நானும் படுச்சு பார்த்துக்குவேன். அத படுச்சு பார்த்துட்டு
கதை எழுதுறது நிப்பாட்டிருவேனு நினைச்சிங்கன அது உங்க தப்பு.
வேணா என்னோட ப்லோக்க(blog) block list ல போட்டு வச்சுக்கோங்க :-) ...

நன்றி
இரவு கவி

Friday, September 12, 2008

பிட் மெகா போட்டிக்கு

முதல் படத்தை பிட் மெகா போட்டிக்கு என்னுடைய சார்பாக அனுப்புகிறேன்

படம் 1




நான் எடுத்த மற்ற பிட் மெகா போட்டி படங்கள் .
நீங்கள் ஏதாவது கருத்து கூறவிரும்பினால் தயவு செய்து பின்னூடத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

படம் 2



படம் 3



படம் 4



படம் 5



படம் 6



படம் 7



படம் 8




இரவு கவி

Tuesday, August 26, 2008

புள்ளி விபரம்



ஒரு வரிசைக்கு ஐந்து புள்ளிகள்,
ஒரு காலத்துக்கு ஐந்து புள்ளிகள் வீதம்
மொத்தம் 25 புள்ளிகள் இருக்கு.

எப்படி நம்ம புள்ளி விபரம்.
எங்க ஆத்தா அப்போவே சொல்லும் இவன் பெரிய அறிவாளியா வருவண்டானு
வந்துடோம்ல !

இந்த பதிவு மட்டும் சூடான இடுகைல வரல அப்புறம் நானும் "விடை பெறுகிறேன்" என்று பதிவு எழுதுவேன்.

குறிப்பு: இவன் விடை பெற்றா என்ன வடை பெற்றா என்ன அப்படின்னு எல்லாம் இருந்துடுவீங்க அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுனால மூச்சு தவறி கூட அப்படி ஒரு பதிவு போட மாட்டேனே.

Wednesday, August 20, 2008

மல்யுத்தத்தில் சுசில்குமார் சாதனை:

மல்யுத்தத்தில் சுசில்குமார் இந்தியாவுக்கா வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார் .

அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

Tuesday, August 12, 2008

இராம் புகைப்பட பக்கம்

மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக இதற்க்கு முந்தைய பதிவை அழித்துவிட்டேன். அதனால் மறுபடியும் போஸ்ட் செய்கிறேன்.

அந்த பதிவுக்கான லிங்க் இங்கே.

இதில் ஏதேனும் லிங்க் ஐ கிளிக் செய்தால் என்னுடைய பதிவுக்கு நீங்கள் செல்லலாம்

இராம் புகைப்பட பக்கம்

அல்லது

இராம் புகைப்பட பக்கம்

Sorry for the trouble.

நன்றி
இரவு கவி

என்னுடைய போட்டோ பக்கம் (My New Blog For Photos)

மன்னித்து கொள்ளவும்: தவறுதலாக என்னுடைய முதல் போஸ்ட் அழித்துவிட்டேன். அதனால் மருபடயும் போஸ்ட் செய்கிறேன்.

நான் எடுத்த புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இராம் புகைப்பட பக்கம்
Blog ஆரம்பித்துள்ளேன். நான் எடுத்த சில பூக்களின் புகைபடத்தை உங்கள் முன் வைக்கிறேன். இதில் உங்கள் குறை, நிறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்து மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்னை புகை படம் எடுக்க தூண்டிய பிட்(PIT) புகைப்பட குழுவினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கீழ் உள்ள link ஐ கிளிக் செய்தால் அது உங்களை என்னுடைய புது Blog அழைத்து செல்லும்.

இராம் புகைப்பட பக்கம்

நன்றி
இரவு கவி

Monday, August 11, 2008

பென்ச் வாழ்கை....

பென்ச் வாழ்கை....

" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது
.
.
.
.
.
.
.
அதனினும் அரிது மென்பொருள் துறையன்றி வேறு துறையில் வேலை கிடைத்தால் அரிது

அதனினும் அரிது மென்பொருள் துறையில் வேலை கிடைத்தபின் பென்ச்சில்(bench) இல்லாமல் இருத்தல் அரிது ".......


ஆமாங்க ஆன்சைட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை பெஞ்ச்ல போட்டுடாங்க ((அப்பாடி ஒரு வழியா நான் ஆன்சைட்ல இருந்து வந்தத சொல்லியாச்சுடா :-))).
மொத ரெண்டு - மூணு நாலு சும்மா ராஜா வாழ்கை மாதிரி நல்லா தாங்க இருந்தது. போக போக உரலு தேஞ்சு அம்மி ஆன கதை ஆக்கிடுச்சு. ஆமாங்க இது எல்லாம் ஒரு பொலப்பானு
ஆகிடுச்சுங்க.

காலில ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரணும். அதுக்கு அப்புறம் எட்டு மணி நேரம் ஆபீஸ்ல கம்பீயூட்டர், எந்த வேலையும் இல்லாம சும்மா எத்தனை மணி வரைக்கும் கான்டீன் போறதும், வாரதுமா இருக்குறது. என்னடா எதாவது வேலை குடுங்கடானு சொன்ன உங்களுக்கு அடுத்த வாரம் கிளையன்ட் நேர்காணல் இருக்குன்னு சொல்லுரானுன்களே ஒழிய ஒன்னையும் காணாம் (என்னடா இவனே போய் வேலை கேக்குறன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல தப்பு கணக்கு போட்டுராதீங்க சும்மா உங்காந்து டைம் பாஸ் பண்ண முடியலை அது தான் போய் வேலை கேக்குறங்க. :-) ).

சரி சும்மா உக்காராம ஏதோ தெருஞ்ச ரெண்டு பேருகூட பேசலாம்னா, அவனுங்க என்னடானா வார்த்தைக்கு ஒரு தடவ கியா ரேய், ஆப் கேசைகே (இது தான் என்னக்கு தெருஞ்ச ஹிந்தி வார்த்தைகள். நாங்க தான் முதல்வர் கலைஞர் சொன்னாருன்னு தமிழ் வளர்த்துகிட்டு இருக்குறோம்ல அதுனால ஹிந்தி படிக்கலை. :-)) அப்படின்னு ஹிந்திலே பேசி உயிர வாங்குறாங்க.

அப்போ அப்போ தெருஞ்சவங்க computer la உக்காந்து தமிழ்மணம், ஜிமெயில் படிச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்குறேங்க. இப்படியே இன்னொரு மாசம் போச்சுனா நம்ம படங்கள வர திருப்பு முனை மாதிரி ஒரு நாள் ஒரு மின்னஞ்சல என்னோட resignation லெட்டர் அனுப்பிச்சிட்டு அப்படியே சென்னை பக்கம் போயிருவேன்னு நெனைக்கிறேன் (தையவு செய்து இத யாரும் எங்க மேனேஜர் கிட்ட சொல்லிராதீங்க :-).)

அதுவரைக்கும் இந்த பெஞ்ச்ஜோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்.

இதுக்கு ஒரு முடிவு காலமே கிடையாதா ?

இப்படிக்கு
பெஞ்ச்ஜோட மல்லுகட்டும்
இரவு கவி

Friday, August 8, 2008

ஆன்சைட் (onsite)

இது எனக்கு forward வந்த மெயில். ஆனா ரொம்ப நல்லா இருக்கு.
இது கொஞ்சம் பெரிய மெயில் ஆனா நல்லா இருக்கு. இத படிச்சதுக்கு அப்புறம் உங்களோட ஆன்சைட் பயணம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்.

நான் எல்லாம் போறப்ப யாரும் வந்து என்ன வழி அனுப்பி வைக்கலை. நானே போய் விமானத்துல எடம் பிடுச்சு ஒரு வழியா போய் சேர்த்தேன். ஆனா என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான் அவன் போகும்போது அவனுக்கு பூ மாலை போட்டு, ஆரத்தி எல்லாம் எடுத்தாங்களாம்.

குறிப்பு: தயவுசெய்து இமேஜ் பெரிது பண்ணி படிக்கவும். sorry for the inconvenience.












Wednesday, August 6, 2008

நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....

நானும் நான் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுனர்களும்....


அது என்னமோ தெரியலைங்க எனக்கும் ஆட்டோ காரங்களுக்கும் அவ்வளவு பொருத்தம்.என்ன பார்த்தா அவங்க எப்படி தான் "இவன் ரொம்ப நல்லவன் எவ்வளவு கேட்டாலும் குடுப்பானு " கண்டு புடிப்பங்களோ தெரியல. நான் ஒரு சாதுவான பிராணிங்க. யாருகுடையும் அவோளவு சீக்கிரமா பேசிட மாட்டேன். (ஆனா பேச ஆரம்பிச்சிட்டேன் அவ்வளவுதான் அவங்க தொளஞ்சாங்க :-).) இது ஆட்டோகாரங்களுக்கு ரொம்ப நல்லதா போச்சு. எப்பயுமே ஆட்டோல ஏறுரப்ப ஒரு ரேட் சொல்லுவாங்க அப்புறம் இறங்கும் பொழுது ஒரு ரேட் கேப்பாங்க. இந்த அட்டோகராங்க கூட மல்லுக்கட்டுன ரெண்டு மூணு சம்பவத்த சொல்லுறேன் கேளுங்க. கேட்டுட்டு எனக்காக கொஞ்சம் வருத்த படுவீங்கனு நெனைக்கிறேன்.


சம்பவம் 1:

ஒரு கிராமத்து பய்யன்(நான் தாங்க) ஹிந்தில ஒரு வார்த்தை கூட தெரியாம முதன் முதலா மும்பைக்கு என்னோட நண்பன் ஒருத்தன பார்க்க போனேன். எனக்கு மும்பை போறதுல ஒரு சந்தோசம் ஏனா அங்க ஆட்டோல எல்லாம் மீட்டர் தான் பயன்படுதுவாங்கனு கேள்விபட்டேன். சரி பஸ்ஸ்டாண்டு போனவுடனே என் நண்பன் கிட்ட போன்போட்டு எப்படிடா வருனும்னேன். அவன் ஒரு அட்ரஸ் சொல்லி அத ஆட்டோல சொல்லு அவங்க கொண்டு வந்து விட்டுவாங்க சொல்லிடு டேய் அங்க இருந்து இங்க வர 30 ரூபாய் ஆகும்னு ஏன் கிட்ட சொன்னான். சரின்னு ஒரு ஆட்டோ காரன்கிட்ட இங்க போகணும் அப்படின்னு இங்கிலீஷ் தான் சொன்னேன் அவனுக்கு என்னத்த புருஞ்சதோ மண்டைய ஆடிட்டு ஓகே அப்படினான். அவன் நான் சொன்ன எடத்துல என்னை இறக்கி விட்டுட்டு 80 ரூபாய் கேட்டான் அப்ப நெனச்சேன் இதுக்கு நம்ம சென்னையே எவ்வளவோ தேவலைன்னு. நான் எவரம் புரியாம அண்ணா மீட்டர் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு அவன்கிட்ட சொல்ல அவன் ஒரு ஸ்லிப் எடுத்து இங்க பாருங்க இதுல என்னா ரேட் போட்டுருக்குனு என்னா பார்க்க சொன்னான். ஆமாங்க அதுல 80 ரூபாய் தான் போட்டிருந்தது. அதுக்குள்ளா என்னோட உயிர் நண்பன் வந்துடான். இப்போ பாருடா அப்படின்னு நெனச்சுகிட்டு என் நண்பன பார்த்து சிரிச்சேன். இதுல என்னா கொடுமைனா அவனுக்கும் ஹிந்தி தெரியாது :-). நாங்க கடைசியா போராடி என்னா காரணம்னு கேட்ட இது பெட்ரோல் ஆட்டோவாம். மும்பைல பெட்ரோல் ஆட்டோ, காஸ் ஆட்டோன்னு ரெண்டு இருக்குறது அப்போதான் என் நண்பனுக்கே தெரிஞ்சது. சரின்னு அவன்கிட்ட காச குடுத்துட்டு வந்தேனுங்க வேற வழிஇல்லமா.
அப்போதான் அவன் சிரிச்ச சிரிப்புக்கு அர்த்தம் புருஞ்சது.

டிஸ்கி: மும்பைல யாரும் பெட்ரோல் ஆட்டோ எற மாட்டங்களாம்.

சம்பவம் 2:

இப்போ என்னா பண்றோம் மும்பைல இறந்து அடுத்த சீன் நம்ம சென்னைக்கு மாத்துறோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தப்ப நங்க நல்லூர்ல இருந்த எங்க அக்கா வீட்டுக்கு போலாம்னு ஏர்போர்ட்ல ஆட்டோ கேட்டா அவன் 200 ரூபாய் கேட்டான். ஏர்போர்ட்ல இருந்து எங்க அக்கா வீட்டுக்கு ஒரு 1.5km தான் இருக்கும்.ஆனாலும் நான் சரின்னு சொல்லிட்டேன். அவன் என்னடணா அங்க வந்ததுக்கு அப்புறம் சார் 300 ரூபாய் குடுங்க அப்படினான். அட பாவி ஏண்டானு கேட்டா அவன் சொன்னான் சார் நீங்க விமானத்துல வந்துருக்குறீங்க அதுனால கொடுங்க அப்படினான். அட பாவி டேய் இது எல்லாம் கொஞ்சம் ஓவருடனு சொல்லி அவன் கிட்ட மல்லுகட்டி கடைசியா 250 ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ளே என்ன ஏர்போர்ட்ல இருந்து கூப்பிட போன எங்க அக்கா அவங்க கார்ல திரும்பி வீட்டுக்கே வந்துடாங்க.

டிஸ்கி: என்னடா இவன் அக்கா கார்ல கூப்பிட வந்துருக்காங்க இவன் ஏன்டா ஆட்டோல வந்தனு யாராவது கேப்பிங்க. அது ஒரு பெரிய கதை அத ஒரு தனி பதிவா போடுறேன்.

இது மாதிரி ஏக பட்டது இருக்குங்க. என் நண்பர்கள்கிட்ட நான் ஆடோல வந்தேன்னு சொன்னா அவங்க மொத கேட்க்கிற கேள்வி இன்னைக்கு எவ்ளோடா அலுதனு கேப்பாங்க.

யாராவது ஒருத்தர் இந்த மாதிரி ஆட்டோ காரங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படின்னு நல்ல ஐடியா குடுதீங்கனா உங்களுக்கு தல நாள்ல ஆம்புள பிள்ளையா புறக்கும்முங்க :-)

Saturday, June 14, 2008

கனவிலுமா....

கனவிலுமா....


பந்தலிட்டு
பட்டாடையுடுத்தி
பந்தங்கள் கூடி
பரிஷமிட்டு
மஞ்சல் கயிற்றை
கட்டும் போது
திடிரென்று சத்தம்
எழுந்தால் கனவு
நிஜத்தில் தான்
உன்னுடன் வாழ முடியவில்லை
கனவிலுமா ....


இரவு கவி

Monday, May 12, 2008

சொல்லாமலேயே செல்கிறேன்

சொல்லாமலேயே செல்கிறேன்


வலது கை எழுதியது
"உன்னை காதலிக்கிறேன்" என்று
இடது கை அதை
அழித்துவிட்டுச் சொன்னது
எங்கே இதை அவள் பார்த்தால்
நம் நட்பும் பிரிந்து விடுமோ
என்ற பயத்தில்
சொல்லாமலேயே செல்கிறேன்
என் காதலை.

Monday, May 5, 2008

PIT- மே 2008 - போட்டி

படம் - 1

 


படம் - 2
 


படம் - 3

 


படம் - 4
 



படம் - 5



படம் - 6



படம் - 7



மேலே உள்ள படங்கள் யாவும் பிட் 2008 மே மாத போட்டிக்கு என்னால் எடுக்கமுடிந்தது. இதில் நான் போட்டிக்கு தேர்ந்தொடுத்த படம் படம் எண் - 7(கடைசி படம்). யாருக்காவது ஏதாவது மாற்றமிருப்பின் தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும்.

நன்றி

Wednesday, April 23, 2008

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக....

கண் இரண்டு
காது இரண்டு
கை இரண்டு
கால் இரண்டு
உதடு இரண்டு
மூளை இரண்டு
நுரையீரல் இரண்டு
சிறுநீரகம் இரண்டு
எனக்கு இதயம்
கூட இரண்டுதான்
.
.
.
.
.
.
.
இதயப்பரிமாற்றம்
காதலில் மட்டுமிருப்பதால்
இன்னொரு இதயத்தை
என்னவளிடம் கொடுத்துவிட்டேன்.



வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை


யாருக்காவது இத படுச்சதுக்கு அப்புறம் கும்மனும்முனு தோனுச்சுனா பின்னூட்டத்தில கும்மிட்டு போங்க :-)

Monday, March 31, 2008

ஏப்ரல் முட்டாளாக்குவதற்க்கு 101 வழிகளில்

ஏப்ரல் முட்டாளாக்குவதற்க்கு 101 வழிகளில்








இதுவும் ஒரு வழி. மீதி 100 நீங்க சொல்லுங்களேன்.

Wednesday, March 19, 2008

ஒற்றை படுக்கையறை வீடு

ஒற்றை படுக்கையறை வீடு


இது ஒரு இந்திய மென்பொருள் துறை வல்லுநரால் எழுதப்பட்ட கசப்பான உண்மை.

இது எனக்குவந்த ஒரு மெயிலின் தமிழாக்கம். இது என் மனதைமிகவும் கவர்ந்ததால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.
ஏதாவது குறையிருப்பின் என்னை மன்னிக்கவும்.



அனைத்து பெற்றோர்களின் கனவுகளும் எப்படியாவது தன் பிள்ளையை மென்பொருள் துறையில் படிக்க வைக்க வேண்டும் என்பதே.நானும் அவர்களின் கனவுகளுக்கு ஏற்ப மென்பொருள் படிப்பை முடித்துவிட்டு, தைரியசாலிகளுக்கும், தன் கனவுகளை நிறைவேற்றி கொள்ள வாய்ப்புகளை அள்ளித்தரும் சொர்க்க பூமியான அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்றேன்.நான் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபொது என் கனவு உண்மையாகி விட்டதுபோலிருந்தது.நான் எங்கு செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அங்கு வந்துவிட்டேன்.இங்கு நான் குறைந்தது ஐந்து வருட காலம் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.நான் தங்கும் அந்த ஐந்துவருட காலத்தில் சம்பாரிக்கும் பணம், இந்தியாவில் நல்ல முறையில் வாழ போதுமானதாக இருக்கும்.


என்னுடைய அப்பா ஒரு அரசாங்க ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அவருடைய ஓய்வுக்குப்பிறகு அவரால் வாங்க முடிந்த ஒரே சொத்து அந்த ஒற்றை படுக்கறையுடன் கூடிய வீடு மட்டுமே.நான் அவரைவிட அதிகமாக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

காலங்கள் செல்ல செல்ல தனிமை என்னை வாட்டியது. தனிமையை விரட்ட நான் என்னுடைய பெற்றோருக்கு போன் செய்து பேசிக்கொள்வேன்.அதன்பிறகு என் இரண்டு வருட காலங்களை மெக்டொனாடிலும், பீஷாவுடனும், டிஸ்கோவிற்க்கு செல்வதுமாக கழித்துக்கொண்டும், எப்பொழுதுதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறதோ
அப்பொழுது எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தேன்.அமெரிக்காவில் இரண்டு வருடங்கள் வசித்த இளைங்கனுக்கு அடுத்தது என்ன் ? கல்யாணம்தான்.
என்னுடைய பெற்றோரும் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டனர்.நான் என் பெற்றோரிடம் எனக்கு பத்து நாள் விடுமுறை மட்டுமே கிடைத்துள்ளது. என் கல்யாணத்தை அந்த பத்து நாட்களுக்கு முடித்துவிட வேண்டுமென்ற கட்டளையுடன் மிக குறைந்த விலையுள்ள
விமானத்தில் என்னுடைய டிக்கட்டை பதிவு செய்து கொண்டேன்.நான் இந்தியா செல்லும் மகிழ்ச்சியில் அனைத்து நண்பர்களுக்கும் அன்பளிப்பு வாங்கிகொண்டேன்.இந்தியா வந்து சேர்ந்தபிறகு, எனது ஒருவார காலம், வந்திருந்த மணப்பெண்களின் புகைபடத்தை
பார்பதிலேயே போய்விட்டது. எனக்கு இருந்த குறைந்த கால அவகாசத்தினாலும், என் உறவினர்களின் கட்டாயத்தாலும் நான் ஒரு பெண்ணை பிடித்தும் பிடிக்காமலும் தேர்வு செய்து கல்யாணமும் முடிந்துவிட்டது.கல்யாணத்துக்குபிறகு என் பெற்றோரிடம்
கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு என் பக்கத்துவீட்டு காரர்களிடம் என் பெற்றோறை பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டு நாங்கள் யூ.எஸ்.ஏ வந்துவிட்டோம்.
என் மனைவி அடுத்த இரண்டு மாத காலம் இந்த புதுயுலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். அதன்பிறகு அவளும் தனிமையின் விரக்த்திக்கு தள்ளபட்டால்.
தனிமையை போக்க, இந்தியாவில் உள்ளவர்களிடம் போன் செய்து பேசினோம். அப்படி தினமும் பேச ஆரம்பித்தோம்.எங்களுடைய சேமிப்பு பணமும் கறைய ஆரம்பித்தது.அடுத்த இரண்டுவருடங்களில், எங்களுக்கு கடவுளின் அருளால் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

எப்பொழுது நான் என் பெற்றோரிடம் போன் பேசினாலும் அவர்கள் என்னிடம் கேட்கும் ஒரே ஆசை. அவர்கள் தன் பேரபிள்ளைகளை பார்க்கவேண்டுமென்பதே. நானும் ஒவ்வொருவருடமும் இந்தியா செல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் வேலை பளு காரணமாக
என்னால் செல்ல முடியவில்லை. இந்தியா செல்வது என்பது கனவாகவே மாறிவிட்டது. வருடங்கள் உருண்டோடின. என் பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லையென்று செய்தி கேட்டும்
என்னால் இந்திய செல்ல முடியவில்லை காரணம் விடுமுறை கிடைக்கவில்லை.

அடுத்த வந்த செய்தி என்னை உழுக்கிப்போட்டது ஆம் என் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்றும்
அவர்களின் இறுதி சடங்கை செய்யக்கூட யாருமில்லததால் அந்த காலணியில் குடியிருப்பவர்களே இறுதிசடங்கு மற்றும்
அனைத்து காரியங்களையும் செய்துவிட்டதாகவும் என்ற செய்தி கேட்டு என் மனம் முழுவது துக்கம் அடைத்துக் கொண்டது.
என் பெற்றோர்கள் தங்களின் பேரப்பிள்ளைகளை கடைசி வரை பார்க்கமலேயே சென்றுவிட்டார்கள்.

சில வருடங்களுக்கு அப்புறம் என் குழந்தைகள் மற்றும் மனைவியின் விருப்பத்திற்க்கேற்ப இந்தியா சென்று தங்கிவிடலாம் என்று
முடிவெடுத்து இந்தியா புறப்புட்டோம். அங்கு ஒரு நல்ல வீடு வாங்க முடிவெடுத்தோம். ஆனால் அங்கு அத்தனை வருட காலங்களில்
வீட்டின் விலைகள் மிக உயர்ந்துவிட்டன. என்னுடைய சேமிப்பும் குறைவாக இருந்ததால் திரும்ப யு.எஸ்.ஏ வர வேண்டியதாகிவிட்டது.
என் குழந்தைகளுக்கும் அங்கு தங்க விருப்பமில்லை ஆனால் என் மனைவி எங்களுடன் வர மறுத்துவிட்டாள்.
என் மனைவியிடம் நாங்கள் இரண்டு வருடம் கழித்து வந்துவிடுவோம் என்று உறுதி கூறி நாங்க மட்டும் வந்துவிட்டோம்.

காலங்கள் உருண்டது. என்னுடைய மகள் ஒரு அமெரிக்க ஆணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டாள்.என்னுடைய மகனுக்கோ யு.எஸ் வாழ்க்கை பிடித்துவிட்டது.
நான் மட்டும் இங்கிருந்து கஷ்டப்பட்டது போதுமென்றெண்ணி இந்தியா வந்துவிட்டென்.
இப்பொழுது என்னிடம் இரண்டு படுக்கறை கொண்ட வீடு வாங்கும் அளவுக்கு பணம் இருந்தது.

இப்பொழுது எனக்கு அறுபது வயதாகிறது. நான் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியே செல்கிறேனென்றால் அது அருகிலிருக்கும்
கோவிலுக்கு மட்டும் தான்.என் அன்பு மனைவியும் என்னைவிட்டு சொர்க்கத்துக்கு சென்றுவிட்டால்.

சில சமயம் நான் என்னையே கேட்டுகொள்வேன் "இவையனைத்தும் மதிப்புடையாத என்று ?"

என்னுடைய அப்பா இந்தியாவிலிருந்து கொண்டே ஒரு படுக்கையறையுள்ள வீட்டை வாங்கியிருந்தார்.. நானும் இரண்டு படுக்கையறையுள்ள ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்.ஒரு அதிகமான படுக்கையறையுள்ள வீட்டை வாங்குவதற்க்காக நான் என்னுடைய குழந்தைகளையும், என்னுடைய பெற்றோரையும் இழந்து விட்டேன்.

என் வீட்டின் ஜன்னல்லிருந்து நிறைய குழந்தைகள் விளையாடுவதை பார்க்கிறேன். அவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கவேண்டும்.

சிலசமயம் என்னுடைய நலம் பற்றிவிசாரித்து என் குழந்தைகளிடமிருந்து கடிதம் வரும்.
இன்னும் அவர்கள் நியாபகம் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

ஆனால் இன்னும் என் மனதில் அந்த கேள்வியிருந்து கொண்டேயிருக்கிறது "இவையனைத்தும் மதிப்புடையதா என்று ?"
இன்னும் அதற்க்கான பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்......

நினைக்கிறேன் இவையனைத்தும் அந்த ஒரு அதிகமான படுக்கையறை கொண்ட வீட்டிற்க்காகவா ?

.
.
.
.
.

வாழ்க்கையென்பது இவையனைத்தையும் தாண்டியது. இந்த கிடைத்த வாழ்க்கையை சாதரணமாக எண்ணிவிடவேண்டாம்.
அதை வாழத் தொடருங்கள். நீங்கள் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதே போல் வாழுங்கள்.



நன்றி

Monday, March 10, 2008

கருவறைக் காதல்

கருவறைக் காதல்

காதலித்து பார்
கல்லறை தெரியும்

இறந்தே பிறந்தேன்

கருவறையிலேயே
காதலித்து விட்டேனோ ?



இரவு கவி

Friday, February 29, 2008

பிறந்த நாள்

அப்பொழுது
கொண்டாட விருப்பமில்லை

இப்பொழுது
ஏன் கொண்டாட கூடாது
பிறந்த தேதியை
மாதம் ஒரு முறை பிறந்தநாளாக
ஏங்குகிறது மனது

அன்று மட்டும் உன்னிடமிருந்து
மின்னஞ்சல் வருவதால்..
என் காதலியே


இரவு கவி

Wednesday, February 13, 2008

பிப்ரவரி மாத போட்டிக்கான என் புகைப்படங்கள்

பிப்ரவரி மாத போட்டிக்கான என் புகைப்படங்கள்


Monday, February 11, 2008

சிகிச்சை

சிகிச்சை

கத்தியின்றி
ரத்தமின்றி
வலியின்றி
செலவின்றி
இருதய மாற்று சிகிச்சை
காதல்..

இரவு கவி

அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, January 15, 2008

ஒற்றைச் சொல்..

ஒற்றைச் சொல்..

பொங்லாம்
தீபாவளியாம்
புத்தாண்டம்
பிறந்தநாளாம்
கச்சேரியாம்
கல்யாணமாம்
கருமாதியம்

அனைத்தும் மின்னஞ்சலில்
வாழ்த்துக்கள் அல்லது வருத்தங்கள்
என்ற ஒற்றைச் சொல்லில்...

விதி விலக்கா

விதி விலக்கா

சுனாமி சிலிர்த்து போனது
உன் ஒரு துளி கண்ணீருக்கு முன்னே

பூகம்பம் புஷ்வானமானது
உன் நடனத்துக்கு முன்னே

சூறாவளி சுருண்டு கொண்டது
உன் கூந்தல் அசைவுக்கு முன்னே

இடி மொளனம் ஆனது
உன் சிரிபொலிக்கு முன்னே

மின்னல் மின்ன மறந்தது
உன் கருவிழி ஒளிக்கு முன்னே

இரவு இரண்டடி நீண்டது
உன் உறங்கும் அழகுக்கு முன்னே

நிலா மறய மறுத்தது
உன் அழகு முகத்துக்கு முன்னே

இயற்கையே ரசிக்கிறது உன்னை
நான் மட்டும் என்ன விதி விலக்கா

என் காதலியே !

இரவு கவி

Saturday, January 12, 2008

போட்டிக்கு என்னுடைய படங்கள்





அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்,