Monday, August 11, 2008

பென்ச் வாழ்கை....

பென்ச் வாழ்கை....

" அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது
.
.
.
.
.
.
.
அதனினும் அரிது மென்பொருள் துறையன்றி வேறு துறையில் வேலை கிடைத்தால் அரிது

அதனினும் அரிது மென்பொருள் துறையில் வேலை கிடைத்தபின் பென்ச்சில்(bench) இல்லாமல் இருத்தல் அரிது ".......


ஆமாங்க ஆன்சைட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை பெஞ்ச்ல போட்டுடாங்க ((அப்பாடி ஒரு வழியா நான் ஆன்சைட்ல இருந்து வந்தத சொல்லியாச்சுடா :-))).
மொத ரெண்டு - மூணு நாலு சும்மா ராஜா வாழ்கை மாதிரி நல்லா தாங்க இருந்தது. போக போக உரலு தேஞ்சு அம்மி ஆன கதை ஆக்கிடுச்சு. ஆமாங்க இது எல்லாம் ஒரு பொலப்பானு
ஆகிடுச்சுங்க.

காலில ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரணும். அதுக்கு அப்புறம் எட்டு மணி நேரம் ஆபீஸ்ல கம்பீயூட்டர், எந்த வேலையும் இல்லாம சும்மா எத்தனை மணி வரைக்கும் கான்டீன் போறதும், வாரதுமா இருக்குறது. என்னடா எதாவது வேலை குடுங்கடானு சொன்ன உங்களுக்கு அடுத்த வாரம் கிளையன்ட் நேர்காணல் இருக்குன்னு சொல்லுரானுன்களே ஒழிய ஒன்னையும் காணாம் (என்னடா இவனே போய் வேலை கேக்குறன் ரொம்ப நல்லவனா இருப்பான் போல தப்பு கணக்கு போட்டுராதீங்க சும்மா உங்காந்து டைம் பாஸ் பண்ண முடியலை அது தான் போய் வேலை கேக்குறங்க. :-) ).

சரி சும்மா உக்காராம ஏதோ தெருஞ்ச ரெண்டு பேருகூட பேசலாம்னா, அவனுங்க என்னடானா வார்த்தைக்கு ஒரு தடவ கியா ரேய், ஆப் கேசைகே (இது தான் என்னக்கு தெருஞ்ச ஹிந்தி வார்த்தைகள். நாங்க தான் முதல்வர் கலைஞர் சொன்னாருன்னு தமிழ் வளர்த்துகிட்டு இருக்குறோம்ல அதுனால ஹிந்தி படிக்கலை. :-)) அப்படின்னு ஹிந்திலே பேசி உயிர வாங்குறாங்க.

அப்போ அப்போ தெருஞ்சவங்க computer la உக்காந்து தமிழ்மணம், ஜிமெயில் படிச்சு டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்குறேங்க. இப்படியே இன்னொரு மாசம் போச்சுனா நம்ம படங்கள வர திருப்பு முனை மாதிரி ஒரு நாள் ஒரு மின்னஞ்சல என்னோட resignation லெட்டர் அனுப்பிச்சிட்டு அப்படியே சென்னை பக்கம் போயிருவேன்னு நெனைக்கிறேன் (தையவு செய்து இத யாரும் எங்க மேனேஜர் கிட்ட சொல்லிராதீங்க :-).)

அதுவரைக்கும் இந்த பெஞ்ச்ஜோட மல்லுக்கட்ட வேண்டியதுதான்.

இதுக்கு ஒரு முடிவு காலமே கிடையாதா ?

இப்படிக்கு
பெஞ்ச்ஜோட மல்லுகட்டும்
இரவு கவி

7 comments:

Tech Shankar said...



Enna Kodumai sir Idhu?

Aruna said...

கடிது கடிது சும்மாயிருப்பது கடிது...
சும்ம்மாக் கலக்கிருக்கீங்க..பேசாம ஏதாவது நகைச்சுவைப் படத்துக்கு கதை வசனம் எழுதுங்க...நேரமாவது போகும்..
அன்புடன் அருணா

ஜோசப் பால்ராஜ் said...

ஒரே ஒரு வாரம் எனக்கு எந்த வேலையும் இல்லாம உக்காந்துருந்தேன், ரொம்ப சிரமாம போச்சுனு போயி என் மேலாளர்கிட்ட சொன்னேன். என்னடா இவன் ரொம்ப நல்லவனா இருக்கானேனு, வேலைய விட்டு போற ஒருத்தர் கிட்ட எனக்கு பயிற்சி கொடுக்க சொன்னாங்க. இப்ப புதுசா வேலைக்கு ஆள் எடுக்காமா அந்த வேலையையும் என்கிட்டயே கொடுத்துட்டு, என்னோட வழக்காமன வேலையையும் கொடுத்து கும்மு கும்முனு கும்முறானுங்கோ..
(ஆனா சம்பளம் அதே சம்பளம் தான்)

எனவே கஷ்டப்பட்டாவது, வேலை செய்யிறமாதிரியே நடிக்கவும். இதெல்லாம் கொடுத்துவைச்ச வாழ்க்கை என நினைக்கவும்.

இரவு கவி said...

//ஒரே ஒரு வாரம் எனக்கு எந்த வேலையும் இல்லாம உக்காந்துருந்தேன், ரொம்ப சிரமாம போச்சுனு போயி என் மேலாளர்கிட்ட சொன்னேன். என்னடா இவன் ரொம்ப நல்லவனா இருக்கானேனு, வேலைய விட்டு போற ஒருத்தர் கிட்ட எனக்கு பயிற்சி கொடுக்க சொன்னாங்க. இப்ப புதுசா வேலைக்கு ஆள் எடுக்காமா அந்த வேலையையும் என்கிட்டயே கொடுத்துட்டு, என்னோட வழக்காமன வேலையையும் கொடுத்து கும்மு கும்முனு கும்முறானுங்கோ..
(ஆனா சம்பளம் அதே சம்பளம் தான்)

எனவே கஷ்டப்பட்டாவது, வேலை செய்யிறமாதிரியே நடிக்கவும். இதெல்லாம் கொடுத்துவைச்ச வாழ்க்கை என நினைக்கவும்.

//

ஆமாங்க நீங்க சொல்லுறதும் சரிதான்னு தோணுது. இல்லாடி எங்கயோ போற பூனையா இழுத்து மடில கட்டுன கதையாயிரும்.

இரவு கவி said...

//
கடிது கடிது சும்மாயிருப்பது கடிது...
சும்ம்மாக் கலக்கிருக்கீங்க..பேசாம ஏதாவது நகைச்சுவைப் படத்துக்கு கதை வசனம் எழுதுங்க...நேரமாவது போகும்..
அன்புடன் அருணா //

நல்லாருக்கே :-)

இரவு கவி said...

// Enna Kodumai sir Idhu? //

kodumaiyo kodumai

Kesavan said...

yov Ram... naan bench-la illa.. aana kadaisiya velai paartha naal enakku nyabagam varala.. ithukuthan offshore team venum.... enjoy pannunga thalai... athukaga kavithaiya eluthi thalidatheenga... appuram engala vera padika solluveenga...