Tuesday, January 15, 2008

ஒற்றைச் சொல்..

ஒற்றைச் சொல்..

பொங்லாம்
தீபாவளியாம்
புத்தாண்டம்
பிறந்தநாளாம்
கச்சேரியாம்
கல்யாணமாம்
கருமாதியம்

அனைத்தும் மின்னஞ்சலில்
வாழ்த்துக்கள் அல்லது வருத்தங்கள்
என்ற ஒற்றைச் சொல்லில்...

விதி விலக்கா

விதி விலக்கா

சுனாமி சிலிர்த்து போனது
உன் ஒரு துளி கண்ணீருக்கு முன்னே

பூகம்பம் புஷ்வானமானது
உன் நடனத்துக்கு முன்னே

சூறாவளி சுருண்டு கொண்டது
உன் கூந்தல் அசைவுக்கு முன்னே

இடி மொளனம் ஆனது
உன் சிரிபொலிக்கு முன்னே

மின்னல் மின்ன மறந்தது
உன் கருவிழி ஒளிக்கு முன்னே

இரவு இரண்டடி நீண்டது
உன் உறங்கும் அழகுக்கு முன்னே

நிலா மறய மறுத்தது
உன் அழகு முகத்துக்கு முன்னே

இயற்கையே ரசிக்கிறது உன்னை
நான் மட்டும் என்ன விதி விலக்கா

என் காதலியே !

இரவு கவி

Saturday, January 12, 2008

போட்டிக்கு என்னுடைய படங்கள்





அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்,

Sunday, December 30, 2007

புது வருட உறுதி மொழி

புது வருட உறுதி மொழி

இந்த வருடமாவது
அதிகாலை எழ வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுந்தேன் 11 மணி அளவில்

இந்த வருடமாவது
பொய் சொல்ல கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
என் அம்மா கேட்டால் பல் துலக்கிவிட்டு
காபி அருந்தினாயா என்று
ஆம் என்றேன் பல் துலக்காமல்

இந்த வருடமாவது
உயிர்வதை செய்யகூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதியவுணவுக்கு மட்டன் பிரியாணி உண்டேன்

இந்த வருடமாவது
நேரத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதிய உணவு உண்டுவிட்டு உரங்கியவன்
இரவு உணவுக்குதான் எழுந்தேன்

இந்த வருடமாவது
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
உறங்கினேன் இரவு இரண்டு மணிக்கு

இந்த வருடமாவது
கவிதை எழுத கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுதினேன் புது வருட உறுதி மொழி

இவை அனைத்திருக்கும் பிறகு
இந்த வருடம் உருதி மொழி எடுக்க கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன் (குறிப்பு: இது கூட உறுதி மொழி தான்)


அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி

இரவு கவி

Thursday, December 6, 2007

சூத்திரம்


சூத்திரம்



நீ + நான் = நாம்
என்று இருந்தேன்

நீ + அவன் = அந்நியன்
ஆக்கிவிட்டாய் என்னை.




இரவு கவி
மா. இராமச்சந்திரன்

இடம் கிடைத்தது



இடம் கிடைத்தது


நான் உருவானேன்
அன்னையின் கருவறையில்

அன்னையிடமிருந்து வெளிவந்தேன்
பூமியில்

பூமியில் வலர ஆரம்பித்தேன்
பள்ளியில்

பள்ளியை முடித்தேன்
கல்லூரியில்

கல்லூரியை முடித்தேன்
கம்பெனியில்

கம்பெனியில் இருந்த
உன்னை காதலித்தேன்

இடம் கிடைத்தது
கருவரையில்...


இரவு கவி
மா. இராமச்சந்திரன்

Thursday, November 29, 2007

கண்ணீருக்காக

கண்ணீருக்காக

புகைப்பதை
குடிப்பதை
புலால் உண்பதை
பொய் சொல்வதை
சூதாடுதலை

அனைத்தையும் விட்டேன்
உன் காதலுக்காக

அடி காதலியே
இவை அனைத்தையும் விடுதல்
எளிதென்பதால்
என்னை காதலிக்க
மறுத்து விட்டாய் நீ

இதோ என் உயிரையும் விடுகிறேன்
உன் காதலை தர வேண்டாம்

எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........


இரவு கவி
மா.இராமச்சந்திரன்