Monday, March 31, 2008

ஏப்ரல் முட்டாளாக்குவதற்க்கு 101 வழிகளில்

ஏப்ரல் முட்டாளாக்குவதற்க்கு 101 வழிகளில்








இதுவும் ஒரு வழி. மீதி 100 நீங்க சொல்லுங்களேன்.

Wednesday, March 19, 2008

ஒற்றை படுக்கையறை வீடு

ஒற்றை படுக்கையறை வீடு


இது ஒரு இந்திய மென்பொருள் துறை வல்லுநரால் எழுதப்பட்ட கசப்பான உண்மை.

இது எனக்குவந்த ஒரு மெயிலின் தமிழாக்கம். இது என் மனதைமிகவும் கவர்ந்ததால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.
ஏதாவது குறையிருப்பின் என்னை மன்னிக்கவும்.



அனைத்து பெற்றோர்களின் கனவுகளும் எப்படியாவது தன் பிள்ளையை மென்பொருள் துறையில் படிக்க வைக்க வேண்டும் என்பதே.நானும் அவர்களின் கனவுகளுக்கு ஏற்ப மென்பொருள் படிப்பை முடித்துவிட்டு, தைரியசாலிகளுக்கும், தன் கனவுகளை நிறைவேற்றி கொள்ள வாய்ப்புகளை அள்ளித்தரும் சொர்க்க பூமியான அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்றேன்.நான் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபொது என் கனவு உண்மையாகி விட்டதுபோலிருந்தது.நான் எங்கு செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அங்கு வந்துவிட்டேன்.இங்கு நான் குறைந்தது ஐந்து வருட காலம் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.நான் தங்கும் அந்த ஐந்துவருட காலத்தில் சம்பாரிக்கும் பணம், இந்தியாவில் நல்ல முறையில் வாழ போதுமானதாக இருக்கும்.


என்னுடைய அப்பா ஒரு அரசாங்க ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அவருடைய ஓய்வுக்குப்பிறகு அவரால் வாங்க முடிந்த ஒரே சொத்து அந்த ஒற்றை படுக்கறையுடன் கூடிய வீடு மட்டுமே.நான் அவரைவிட அதிகமாக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

காலங்கள் செல்ல செல்ல தனிமை என்னை வாட்டியது. தனிமையை விரட்ட நான் என்னுடைய பெற்றோருக்கு போன் செய்து பேசிக்கொள்வேன்.அதன்பிறகு என் இரண்டு வருட காலங்களை மெக்டொனாடிலும், பீஷாவுடனும், டிஸ்கோவிற்க்கு செல்வதுமாக கழித்துக்கொண்டும், எப்பொழுதுதெல்லாம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறதோ
அப்பொழுது எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தேன்.அமெரிக்காவில் இரண்டு வருடங்கள் வசித்த இளைங்கனுக்கு அடுத்தது என்ன் ? கல்யாணம்தான்.
என்னுடைய பெற்றோரும் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டனர்.நான் என் பெற்றோரிடம் எனக்கு பத்து நாள் விடுமுறை மட்டுமே கிடைத்துள்ளது. என் கல்யாணத்தை அந்த பத்து நாட்களுக்கு முடித்துவிட வேண்டுமென்ற கட்டளையுடன் மிக குறைந்த விலையுள்ள
விமானத்தில் என்னுடைய டிக்கட்டை பதிவு செய்து கொண்டேன்.நான் இந்தியா செல்லும் மகிழ்ச்சியில் அனைத்து நண்பர்களுக்கும் அன்பளிப்பு வாங்கிகொண்டேன்.இந்தியா வந்து சேர்ந்தபிறகு, எனது ஒருவார காலம், வந்திருந்த மணப்பெண்களின் புகைபடத்தை
பார்பதிலேயே போய்விட்டது. எனக்கு இருந்த குறைந்த கால அவகாசத்தினாலும், என் உறவினர்களின் கட்டாயத்தாலும் நான் ஒரு பெண்ணை பிடித்தும் பிடிக்காமலும் தேர்வு செய்து கல்யாணமும் முடிந்துவிட்டது.கல்யாணத்துக்குபிறகு என் பெற்றோரிடம்
கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு என் பக்கத்துவீட்டு காரர்களிடம் என் பெற்றோறை பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டு நாங்கள் யூ.எஸ்.ஏ வந்துவிட்டோம்.
என் மனைவி அடுத்த இரண்டு மாத காலம் இந்த புதுயுலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். அதன்பிறகு அவளும் தனிமையின் விரக்த்திக்கு தள்ளபட்டால்.
தனிமையை போக்க, இந்தியாவில் உள்ளவர்களிடம் போன் செய்து பேசினோம். அப்படி தினமும் பேச ஆரம்பித்தோம்.எங்களுடைய சேமிப்பு பணமும் கறைய ஆரம்பித்தது.அடுத்த இரண்டுவருடங்களில், எங்களுக்கு கடவுளின் அருளால் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

எப்பொழுது நான் என் பெற்றோரிடம் போன் பேசினாலும் அவர்கள் என்னிடம் கேட்கும் ஒரே ஆசை. அவர்கள் தன் பேரபிள்ளைகளை பார்க்கவேண்டுமென்பதே. நானும் ஒவ்வொருவருடமும் இந்தியா செல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் வேலை பளு காரணமாக
என்னால் செல்ல முடியவில்லை. இந்தியா செல்வது என்பது கனவாகவே மாறிவிட்டது. வருடங்கள் உருண்டோடின. என் பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லையென்று செய்தி கேட்டும்
என்னால் இந்திய செல்ல முடியவில்லை காரணம் விடுமுறை கிடைக்கவில்லை.

அடுத்த வந்த செய்தி என்னை உழுக்கிப்போட்டது ஆம் என் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்றும்
அவர்களின் இறுதி சடங்கை செய்யக்கூட யாருமில்லததால் அந்த காலணியில் குடியிருப்பவர்களே இறுதிசடங்கு மற்றும்
அனைத்து காரியங்களையும் செய்துவிட்டதாகவும் என்ற செய்தி கேட்டு என் மனம் முழுவது துக்கம் அடைத்துக் கொண்டது.
என் பெற்றோர்கள் தங்களின் பேரப்பிள்ளைகளை கடைசி வரை பார்க்கமலேயே சென்றுவிட்டார்கள்.

சில வருடங்களுக்கு அப்புறம் என் குழந்தைகள் மற்றும் மனைவியின் விருப்பத்திற்க்கேற்ப இந்தியா சென்று தங்கிவிடலாம் என்று
முடிவெடுத்து இந்தியா புறப்புட்டோம். அங்கு ஒரு நல்ல வீடு வாங்க முடிவெடுத்தோம். ஆனால் அங்கு அத்தனை வருட காலங்களில்
வீட்டின் விலைகள் மிக உயர்ந்துவிட்டன. என்னுடைய சேமிப்பும் குறைவாக இருந்ததால் திரும்ப யு.எஸ்.ஏ வர வேண்டியதாகிவிட்டது.
என் குழந்தைகளுக்கும் அங்கு தங்க விருப்பமில்லை ஆனால் என் மனைவி எங்களுடன் வர மறுத்துவிட்டாள்.
என் மனைவியிடம் நாங்கள் இரண்டு வருடம் கழித்து வந்துவிடுவோம் என்று உறுதி கூறி நாங்க மட்டும் வந்துவிட்டோம்.

காலங்கள் உருண்டது. என்னுடைய மகள் ஒரு அமெரிக்க ஆணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டாள்.என்னுடைய மகனுக்கோ யு.எஸ் வாழ்க்கை பிடித்துவிட்டது.
நான் மட்டும் இங்கிருந்து கஷ்டப்பட்டது போதுமென்றெண்ணி இந்தியா வந்துவிட்டென்.
இப்பொழுது என்னிடம் இரண்டு படுக்கறை கொண்ட வீடு வாங்கும் அளவுக்கு பணம் இருந்தது.

இப்பொழுது எனக்கு அறுபது வயதாகிறது. நான் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியே செல்கிறேனென்றால் அது அருகிலிருக்கும்
கோவிலுக்கு மட்டும் தான்.என் அன்பு மனைவியும் என்னைவிட்டு சொர்க்கத்துக்கு சென்றுவிட்டால்.

சில சமயம் நான் என்னையே கேட்டுகொள்வேன் "இவையனைத்தும் மதிப்புடையாத என்று ?"

என்னுடைய அப்பா இந்தியாவிலிருந்து கொண்டே ஒரு படுக்கையறையுள்ள வீட்டை வாங்கியிருந்தார்.. நானும் இரண்டு படுக்கையறையுள்ள ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்.ஒரு அதிகமான படுக்கையறையுள்ள வீட்டை வாங்குவதற்க்காக நான் என்னுடைய குழந்தைகளையும், என்னுடைய பெற்றோரையும் இழந்து விட்டேன்.

என் வீட்டின் ஜன்னல்லிருந்து நிறைய குழந்தைகள் விளையாடுவதை பார்க்கிறேன். அவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கவேண்டும்.

சிலசமயம் என்னுடைய நலம் பற்றிவிசாரித்து என் குழந்தைகளிடமிருந்து கடிதம் வரும்.
இன்னும் அவர்கள் நியாபகம் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

ஆனால் இன்னும் என் மனதில் அந்த கேள்வியிருந்து கொண்டேயிருக்கிறது "இவையனைத்தும் மதிப்புடையதா என்று ?"
இன்னும் அதற்க்கான பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்......

நினைக்கிறேன் இவையனைத்தும் அந்த ஒரு அதிகமான படுக்கையறை கொண்ட வீட்டிற்க்காகவா ?

.
.
.
.
.

வாழ்க்கையென்பது இவையனைத்தையும் தாண்டியது. இந்த கிடைத்த வாழ்க்கையை சாதரணமாக எண்ணிவிடவேண்டாம்.
அதை வாழத் தொடருங்கள். நீங்கள் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதே போல் வாழுங்கள்.



நன்றி

Monday, March 10, 2008

கருவறைக் காதல்

கருவறைக் காதல்

காதலித்து பார்
கல்லறை தெரியும்

இறந்தே பிறந்தேன்

கருவறையிலேயே
காதலித்து விட்டேனோ ?



இரவு கவி