புது வருட உறுதி மொழி
இந்த வருடமாவது
அதிகாலை எழ வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுந்தேன் 11 மணி அளவில்
இந்த வருடமாவது
பொய் சொல்ல கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
என் அம்மா கேட்டால் பல் துலக்கிவிட்டு
காபி அருந்தினாயா என்று
ஆம் என்றேன் பல் துலக்காமல்
இந்த வருடமாவது
உயிர்வதை செய்யகூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதியவுணவுக்கு மட்டன் பிரியாணி உண்டேன்
இந்த வருடமாவது
நேரத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
மதிய உணவு உண்டுவிட்டு உரங்கியவன்
இரவு உணவுக்குதான் எழுந்தேன்
இந்த வருடமாவது
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்று உறுதி மொழி எடுத்தேன்
உறங்கினேன் இரவு இரண்டு மணிக்கு
இந்த வருடமாவது
கவிதை எழுத கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன்
எழுதினேன் புது வருட உறுதி மொழி
இவை அனைத்திருக்கும் பிறகு
இந்த வருடம் உருதி மொழி எடுக்க கூடாது
என்று உறுதி மொழி எடுத்தேன் (குறிப்பு: இது கூட உறுதி மொழி தான்)
அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி
இரவு கவி
Sunday, December 30, 2007
Thursday, December 6, 2007
இடம் கிடைத்தது
Subscribe to:
Posts (Atom)