Thursday, November 29, 2007

கண்ணீருக்காக

கண்ணீருக்காக

புகைப்பதை
குடிப்பதை
புலால் உண்பதை
பொய் சொல்வதை
சூதாடுதலை

அனைத்தையும் விட்டேன்
உன் காதலுக்காக

அடி காதலியே
இவை அனைத்தையும் விடுதல்
எளிதென்பதால்
என்னை காதலிக்க
மறுத்து விட்டாய் நீ

இதோ என் உயிரையும் விடுகிறேன்
உன் காதலை தர வேண்டாம்

எனக்காக ஒரு சொட்டு
கண்ணீர் மட்டும் விடுவாயா.........


இரவு கவி
மா.இராமச்சந்திரன்

Sunday, November 11, 2007

மதத்தை அழிக்கத்துடிக்கும் என் தோழா

மதத்தை அழிக்கத்துடிக்கும்
என் தோழா
அதை விரைவில் அழி
இல்லையேல்
என் காதலை அழித்தது போல்
இன்னும் அது எத்தனை
காதலை அழிக்குமோ


இரவு கவி
மா.இராமச்சந்திரன்

மறக்கமுடியவில்லை

அடி காதலியே
இறக்கும் தருவாயில் கூட
காதலை சொல்லாமல் சென்று விட்டாயே
காதலை சொல்லீயிருந்தால்
உன்னை சில காலங்களுக்கு பிறகு
மறந்து விடுவேனென்றா.....

இரவு கவி
மா.இராமச்சந்திரன்

இனிய தமிழர்களுக்கு


Saturday, November 3, 2007

தாமதம்

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் என்னுள் தோன்றிய கவிதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்
அதில் ஏதும் குறை, நிறை, ஆலோசனைகள் இருந்தால் எனக்கு தயவுசெய்து தெரியபடுத்தவும்.

இரவு கவிஞன்
இராமச்சந்திரன்.